யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு அரச ஊழியர்களும் பங்காற்றினர்!
நாட்டில் இடம்பெற்ற 30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அரச ஊழியர்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கோட்டாபய ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் அரச சேவையில் இருந்தவர்களின் செயற்பாடு முக்கிய தேவையானதொன்றாக காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரச சேவையில் ஏற்படும் பாதிப்புக்கள் நாட்டின் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்துமென கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே இயற்றப்படும் புதிய சட்டங்கள் அரசாங்க ஊழியர்களை பாதுகாப்பதாக அமைய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை அரச சேவையில் உள்ளவர்களும் திறமையாக செயற்பட வேண்டுமெனவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.