வடக்கு மக்களும் எமது பிரஜைகளே!

வடக்கு மக்களும் எமது பிரஜைகளே!

வடக்கு மக்களும் எமது பிரஜைகள் என்று நினைத்தே அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் எதிர்க் கட்சிகளின் பிரதம கொரடாவுமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதம் இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

‘ஜெனீவாவில் சுமந்திரன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். வடக்கு மக்களும் எமது பிரஜைகள் என்று நினைத்தே அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அத்துடன் மனோ தித்தவல தலைமையிலான குழு ஜெனிவா சென்றிருந்தால் நாட்டுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்” எனத் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net