இராணுவத்தினர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின் தண்டனை நிச்சயம்!

இராணுவத்தினர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின் தண்டனை நிச்சயம்!

யுத்த குற்றச்சாட்டு தொடர்பாக சாட்சிகளோடு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படுமாயின் தரம் பார்க்காது இராணுவத்தினர் தண்டிக்கப்படுவார்களென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

“தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. எதை செய்ய முடியும் என்பதை நேரடியாக கூற வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் அதனையும் மக்களிடம் தெளிவாக நேரடியாக கூற வேண்டும.

எந்தவொரு இராணுவத்திலும் தவறான இராணுவத்தினரும் இருக்க வாய்ப்புண்டு. அதேபோல் இலங்கை இராணுவத்திலும் 2 அல்லது 3 சதவீதத்திலான தவறு செய்தவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

இதை இராணுவத்தளபதியே தெரிவித்துள்ளார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net