சிங்கள மக்கள் மாத்திரம் வாழவேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம்!

சிங்கள மக்கள் மாத்திரம் வாழவேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம்!

சிங்கள மக்கள் மாத்திரம் வாழவேண்டும் என்பதே பிரதமரின் நோக்கமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதனாலேயே வாழைச்சேனை கடதாசி ஆலையை மீள் புனரமைப்பு செய்வதற்கு பிரதமர், தொடர்ச்சியாக மழுங்கடித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலகவங்கியின் நிதியொதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“வாழைச்சேனை கடதாசி ஆலையானது யுத்த காலத்தில் மூடப்பட்டது. இத்தொழிற்சாலையை மீள இயக்குதவதற்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் முழு முயற்சியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

தற்போது அபுதாபியில் உள்ள தமிழர்கள் 20,000 மில்லியன் ரூபாய்களைக் கொண்டு வாழைச்சேனை காகிததொழிற்சாலை ஆரம்பிப்பதற்கு ஆர்வமாகவுள்ளார்கள்.

ஜனாதிபதியும் வாழைச்சேனை காகித தொழிற்சாலையை இயக்குவதற்கு அனுமதி வழங்கியிருந்தார். எனினும் நிதிகள் தயாராகவிருந்தும் பிரதமர் அனுமதிதர மறுக்கின்றார்.

பிரதமரின் முக்கிய நோக்கம் எம்பிலிப்பிட்டியாவை அபிவிருத்தி செய்து சிங்கள மக்கள் மட்டும்தான் வாழவேண்டும் என்பதுதான். காகித தொழிற்சாலையை மீள் புனரமைப்பு செய்வதை பிரதமர் மழுங்கடிக்கும் நோக்கில் உள்ளார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 1819 Mukadu · All rights reserved · designed by Speed IT net