திருகோணமலையில் நிதி ஒதுக்கீடு என்பது குறைவாகவே காணப்படுகின்றது!
திருகோணமலை மாவட்ட மக்களுக்கு சுகாதார ரீதியில் சரியான நிதி ஒதுக்கீடுகளை செய்து சுகாதாரத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது திருகோணமலை மாவட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு என்பது குறைவாகவே காணப்படுகின்றது.
யுத்தத்தினாலும், சுனாமியினாலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதாரத்துறையை மேம்படுத்த நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும்.
கிண்ணியா,மூதூர் வைத்தியசாலைகள் தரம் உயர்த்தப்பட்ட போதிலும் வேலைத்திட்டங்கள் நிறைவு பெறாமல் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.