வவுனியாவில் இளைஞருக்கு சரமாரியாக வாள்வெட்டு!
வவுனியா – நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சமபவம் இன்று அதிகாலை மூன்று மணியளவில் நெளுக்குளம் சந்திக்கு அருகில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
வியாபார நடவடிக்கைகளுக்காக தட்டாங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்து கொண்டிருந்த நபர் மீது, முகத்தை மறைத்து கொண்டு பற்றைக்குள் பதுங்கி நின்ற இருவர் சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் செட்டிக்குளம் – தட்டாங்குளம் பகுதியினை சேர்ந்த 27 வயதுடைய நவசுதர்சன் என்ற நபரே காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.