இலங்கை குறித்த ஐ.நா. தீர்மானத்திற்கு 46 நாடுகள் இணை அனுசரணை.

இலங்கை குறித்த ஐ.நா. தீர்மானத்திற்கு 46 நாடுகள் இணை அனுசரணை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 40 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு, மேலும் பல நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

ஆதன்படி மொத்தமாக இந்த தீர்மானத்திற்கு 46 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி கையெழுத்திடுவதற்கான இறுதி நாள் கடந்த 5ஆம் திகதியென (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே 30 நாடுகள் கையெழுத்திட்டிருந்த நிலையில், இந்தக் கால அவகாசத்துக்குள் மேலும் 16 நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளதாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ், இஸ்ரேல், மாலைதீவு, போர்துகல், தென்கொரியா, சுவிட்சர்லாந்து மற்றும் ஜப்பான், ஸ்பெய்ன் உள்ளிட்ட 16 நாடுகளே இவ்வாறு இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி அவுஸ்ரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், ஜேர்மனி, இத்தாலி, மற்றும் இலங்கை சுவீடன், பிரித்தானியா உள்ளிட்ட 30 நாடுகள் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 8994 Mukadu · All rights reserved · designed by Speed IT net