கோட்டபாயவினால் நேரடியாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டேன்!

கோட்டபாயவினால் நேரடியாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டேன்!

கோட்டாபயவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணைகளும் இடம்பெறவுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்து யஸ்மின் ஷூக்கா உன்னிப்பாக கவனஞ்செலுத்தி வருகின்றார். இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ மீதான வழக்குகள் குறித்தும் அவர் அவதானம் செலுத்தியுள்ளார்.

அந்தவகையில், நேற்று கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு குறித்து ஊடக சந்திப்பு ஒன்றை  (செவ்வாய்க்கிழமை) லண்டனில் யஸ்மின் ஷூக்கா நடத்தியுள்ளார்.

அந்த ஊடக சந்திப்பில் குறித்த வழக்குகளில் ஒன்றைத் தாக்கல் செய்த கனேடியப் பிரஜையான ரோய் சமாதானம் என்பவரும் பங்குபற்றினார்.

ரோய் சமாதனம் கருத்து தெரிவிக்கையில்,
நான் நேரடியாக கோட்டபாயவினால் இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டேன்.

சரத்பொன்சேகாவை கொல்ல முயற்சி செய்தது விடுதலைப்புலிகளுக்கு ஜிபிஎஸ் தொழில்நுட்ப சாதனங்களை வழங்கி உதவியது என குற்றங்கள் சுமத்தப்பட்டு நான் கைது செய்யப்பட்டிருந்தேன். பின் பல சித்திரவதைகளுடன் வற்புறுத்தி வாக்குமூலம் பெயற வைக்கப்பட்டேன்.

நான் கனேடிய பிரஜை என்ற காரணத்தால் செஞ்சிலுவை சங்கம் என்னை நேரடியாக வந்து பார்த்தது.

கனடா இலங்கை சட்டங்களை மீறி என் விடயத்தில் தலையிட முடியாமல் இருந்தது என்றார்.

இதில் ஜஸ்மின் சூக்கா கருத்து தெரிவிக்கையில் இவ்வாறான சாட்சியங்கள் மூல
ம் வழக்குத் தொடரப்படுவதன் மூலம் மேலும் இலங்கையில் சித்திரவதைக்கும் பாதிப்புக்கும் போர் விதிமுறைகளை மீறிய குற்றங்களால் பாதிக்கப்பட்ட சாட்சியங்கள் வழக்குகளை தொடர முன்வருவார்கள் என தெரிவித்தார்.

இதே வேளை யஸ்மின் சூக்காவினால் நடத்தப்பட்டுள்ள ஊடக சந்திப்பில்
கோட்பாயவிற்குஅழைப்பாணைஅனுப்பப்பட்டுள்ளது.

அதற்கு அவர் நீதிமன்றில் தோன்றி தன் சார்பு கருத்துக்களை தெரிவிக்காத பட்சத்தில் பெரும்பாலும் வழக்கை தொடர்ந்தவர்களுக்கு சார்பாக தீர்ப்புக்கள் வழங்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 1361 Mukadu · All rights reserved · designed by Speed IT net