இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்படவுள்ள நோய்!
தட்டம்மை எனப்படும் அம்மை நோயை இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டில் இலங்கையிலிருந்து முழுமையாக ஒழிக்க எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இந்த தட்டமை நோயின் தாக்கம் பெரிதளவில் இல்லாத போதிலும், இந்த நோய் தாக்கத்தையுடைய சில தொற்றாளர்கள் அறியப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த நோயை ஒழிக்கும் நடவடிக்கை விசேட குழு ஒன்றின் மூலம் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார சேவை பணிப்பாளரான விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
இவ்வாறு நோய் தொற்ருக்குள்ளானவர்கள், வெளிநாடுகளில் வைத்து இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருக்கக்கூடும் எனத் தாம் சந்தேகிக்கின்றோம்.
இந்த நிலையில், குறித்த நோய்த் தாக்கத்தின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2019 ஆம் ஆண்டின் முதல் 3 மாத காலப்பகுதியில் தட்டம்மை நோய் பரவுகின்றமையானது மூன்று மடங்கினால் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஆபிரிக்க வலயத்தில் இந்த நோய் தொற்று அதிகளவில் பரவுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாகவும், அங்க இதன் வளர்ச்சி வேகம் 700 சதவீதமாக உள்ளது என்றும் சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.