99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி!

99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி!

கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் 99 வயது பாட்டி ஒருவர்.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் இசேபியா லியோனார் கார்டல் (99). படிப்பின் மீது தீரா ஆர்வம் கொண்ட இவர், சிறுவயதில் குடும்பச் சூழல் காரணமாக பாதியிலேயே பாடசாலையிலிருந்து நிறுத்தப்பட்டார்.

தாயின் இறப்பு, திருமணம் என தொடர்ந்து ஏற்பட்ட தடைகளால் இசேபியாவின் பாடசாலைக் கனவு நிறைவேறாமல் போனது.

ஆனாலும் தனது படிப்பை நிறைவு செய்ய வேண்டும் என்ற ஆசை அவர் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில் தனது 98வது வயதில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இசேபியாவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட அவர், அடல்ட்ஸ் ஆப் லப்ரிடா பாடசாலை சேர்ந்தார்.

குறித்த பாடசாலையில் வாசிக்கவும் எழுதவும் கற்று கொண்ட இசேபியா விரைவில் கணினியையும் உபயோகிக்க கற்று கொள்ளவுள்ளார்.

குறைந்த வயதுள்ளவர்களே பல்வேறு உடல்நிலை குறைபாடுகளைக் காரணம் காட்டி பாடசாலை, கல்லூரி மற்றும் அலுவலத்தில் விடுமுறை கேட்கையில், தற்போது 99 வயதாகும் இசேபியா இதுவரை ஒருநாள் கூட பாடசாலைக்கு விடுமுறை எடுத்ததில்லையாம்.

‘முதுமையில் பல விஷயங்களை நாம் மறந்து விடுவோம். பாடசாலை அட்டவணை எனக்கு நினைவில் இருக்கிறது.

ஆனால் எழுதவும் வாசிக்கவும் எனக்கு கடினமாக உள்ளது’ என தனது பாடசாலை அனுபவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் இசேபியா.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net