மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ள ரவி கருணாநாயக்க, ஆசாத்சாலி .
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று வரும் 78 பேருக்கு, தேவையான வளங்களைப் பெற்றுக் கொண்டு விரைந்து சிகிச்சையளிக்குமாறும் வைத்தியசாலை பணிப்பாளருக்கு அமைச்சர் ரவிகருணாநாயக்கா, அளுநர் அசாத்சாலி ஆகியோர் நேரில் சென்று பணிப்புரைவழங்கியுள்ளனர்.
மட்டக்களப்பில் சியோன் தேவாலயத்தில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பத்தினை பார்வையிடவதற்காக அமைசச்சர் ரவிகருணாநாயக்கா,மேல் மாகாண அளுநர் ஆசாத்சாலி ஆகியோர் சென்றனர்.
வெடிச்சம்பவம் இடம்பெற்ற தேவாலயத்தினை இதன்போது பார்வையிட்டு படையினரிடம் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட பின்னர் காயமடைந்தவர்களின் நிலமை தொடர்பில் ஆராயும் பொருட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்றிருந்தனர்..
இதன்போது காயடைந்தவர்களின் சிக்ச்சை முன்னேற்றம் மற்றும் காயமடைந்தவர்களின் நிலமை தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சையினை விரைவாக வழங்குவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும்
இதன் பொருட்டு வளங்கள் பற்றாக்குறையாக காணப்படுமாயின் பற்றாக்குறையாக காணப்படும் வளங்களைப் பெற்றுக்கொண்டு விரைவாக சிக்கிச்சை நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என பணிப்பாளருக்கு இதன் போது பணிப்புரைவழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காயமடைந்தவர்களை நெரில் சென்று பார்வையிட்டதுடன் சிகிச்சை முன்னேற்றம் தொடர்பில் உறவினர்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன் சம்பவம் தொடர்பில் தங்களது கவலையினையும் வெளியிட்டிருந்தனர்.