மரண‌த்தை வென்ற இயேசு கிறிஸ்து!

மரண‌த்தை வென்ற இயேசு கிறிஸ்து!

உலகவாழ் கிறிஸ்தவர்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடுகின்றனர்.

இயேசு கிறிஸ்து தாம் முன்னுரைத்தப்படியே சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தனையே கிறிஸ்தவர்கள் இன்று உயிர்த்த ஞாயிறு பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.

இயேசு தாம் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில் மரணத்திலிருந்து ஜெயித்ததன் மூலமாய் மனுகுலத்திற்கு புதிய விடுதலையை பெற்றுக்கொடுத்த நாளாக இன்றைய நாள் நோக்கப்படுகின்றது.

உலக மக்களின் பாவங்களை சுமந்த இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் தன் இன்னுயிரை இரட்சிப்பின் மேன்மை கருதி தியாகம் செய்தார்.

வாரத்தின் முதலாம் நாள் விடியட்காலையில் இரண்டு பெண்கள் இயேசு அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைக்கு சென்றனர்.

அப்போது கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித்தள்ளப்பட்டிருந்ததை கண்டு கலக்கமடைந்தார்கள்.

வேதூதன் அவர்கள் முன் தோன்றி உயிரோடிருப்பவரை மரித்த இடத்தில் தேடுவதென்ன? அவர் இங்கு இல்லை. அவர் உயிர்தெழுந்தார் என்றார்கள்.

அதனை அவர்கள் இயேசுவின் சீடர்களுக்கு அறிவித்தார்கள். பின்னர் இயேசு தமது சீடர்கள் மத்தியில் தோன்றி உங்களுக்கு சமாதானம் என கூறி தம்மை வெளிப்படுத்தினார்.

இயேசு கிறிஸ்து தாம் முன்னுரைத்தப்படியே அறையப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தனையே கிறிஸ்தவர்கள் இன்று உயிர்த்த ஞாயிறு பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.

இயேசு தாம் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில் மரணத்திலிருந்து ஜெயித்ததன் மூலமாய் மனுகுலத்திற்கு புதிய விடுதலையை பெற்றுக் கொடுத்த நாளாக இன்றைய நாள் நோக்கப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net