ஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன?
தேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலையில் உள்ளேன் என அவரின் சகோதரி முகமட் ஹாசிம் மதானியா பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
எனக்கு ஊடகங்கள் மூலமாகவே இந்த விடயங்கள் குறித்து தெரியவந்தது என தெரிவித்துள்ள அவர் எனது சகோதரர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்
அவர் செய்துள்ள விடயங்களை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்,எனது சகோதரர் என்றால் கூட என்னால் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது நான் இனிமேல் அவர் குறித்து அக்கறை கொள்ளப்போவதில்லை எனவும் மதனியா தெரிவித்துள்ளார்.
அயலவர்கள் அனைவருடனும் அவர் சிறந்த உறவை கொண்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ள மதனியா எனினும் கடந்த இரண்டு வருடங்களாக அவருடனான தொடாபு துண்டிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் இந்ததாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளமை எங்களிற்கு கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ள காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் முகமட் சுபைர் நாங்கள் இதன் காரணமாக அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
எங்கள் சமூகம் கடும்போக்குவாதிகளை ஆதரிப்பதில்லை நாங்கள் ஐக்கியம் அமைதி ஆகியவற்றை நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.