தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் சாரிகாமுல்ல வீட்டில் இருந்து சென்ற வாகனம்!
சினமன் கிரான்ட் ஹோட்டல் மற்றும் ஷங்கரிலா ஹோட்டல் ஆகியவற்றில் தற்கொலைதாரிகள் குண்டுகளை வெடிக்க வைத்து சிதறியுள்ளார்கள்.
இவர்கள் இலங்கையில் மிக முக்கியமான – செல்வாக்கு மிக்க – தனவந்தர்களில் ஒருவரான மொஹமட் இப்ரஹிமினுடைய மகன்கள் என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.
முகமட் இப்ரஹிம் ஜே.வி.பி.யின் மிக முக்கிய ஆதரவாளர்களில் ஒருவர். 2006ம் ஆண்டு முதல் இலங்கையிலிருந்து மிளகாய் தூள் ஏற்றுமதி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் மிகப் பிரபலமான நிறுவனத்தின் உரிமையாளர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவரது மூத்த மகனும் சினமன் கிரான்ட் ஹோட்டலில் வெடித்து சிதறியவருமான இன்சாவ் அகமட், மிளகாய் தூள் ஏற்றுமதி நிறுவனத்தின் முகாமையாளர்களில் ஒருவராக பணியாற்றி தகப்பனுக்கு உதவி வந்துள்ளார்.
சொந்தமாக செப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார் என்று கூறப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு மொஹமட் இப்ராஹிம் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவருக்கான ஜனாதிபதி விருது பெற்ற போது தனது மூத்த மகனோடு இணைந்து தான் அந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.
அது குறித்த புகைப்படமும் இப்போது வெளியாகியுள்ளது.
இன்சாவ் மொஹமட், செல்வந்தர்களில் ஒருவரான நகைக்கடை உரிமையாளர் ஒருவரின் மகளை திருமணம் செய்து அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தன.
கடந்த மூன்று வருடங்களாகவே பிரித்தானியா உட்பட சில வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்து வந்த இன்சாவ்,. தாக்குதல் இடம்பெற்ற தினத்துக்கு முதல் வெள்ளிக்கிழமை தான் ஸாம்பியாவுக்கு போகவுள்ளதாகக் கூறி புறப்பட்டு சென்றதாகவும் மனத்திடத்தோடு இருக்கும் படியும் மனைவிக்கு கூறினார் என்றும் கூறப்படுகிறது.
தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற பின்னர், இன்சாவினுடைய கொழும்பு பங்களாவுக்கு பொலிஸார் சென்ற போது அங்கு அவரது மனைவி குண்டை வெடிக்க வைத்து பிள்ளைகளுடன் உயிரிழந்ததுள்ளார்.
இந்த சம்பவத்தில் மூன்று பொலிஸாரும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும் போது இன்சாவின் மனைவி பாத்திமா கர்ப்பிணியாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
இன்சாவின் இளைய சகோதரரான இல்ஹாம் கடந்த சில வருடங்காகவே தனது மூத்த சகோதரருடன் முன்பிலும் விட நெருக்கமாக பழகத் தொடங்கியருந்தார் என்று கூறப்படுகிறது. இவர்களது இளைய சகோதரர் குறித்தும் பொலிஸார் தற்போது விசாரணை செய்து வருகிறார்கள்.” என அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.