பொலிசாரால் தேடப்படும் பெண்ணை கிளிநொச்சி தேவாலயத்தில் கண்டேன்.

பொலிசாரால் தேடப்படும் பெண்ணை கிளிநொச்சி தேவாலயத்தில் கண்டேன் – மதகுரு ஜேசுதாஸ்

சமய நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் சர்வமத கலந்துரையாடல் இடம்பெற்றது.

கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று ஒன்பது முப்பது மணிக்கு ஆரம்பமான இன் நிகழ்வில் சைவ ,கிறிஸ்தவ ,இஸ்லாமிய மத குருக்கள் மதத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ,வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான குருகுலராஜா ,பசுபதிப்பிள்ளை கரைச்சி தவிசாளர் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஏற்ப்பட்டுள்ள திடீர் சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என பல்வேறு பட்ட விடயங்கள் பேசித் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இத போது கருத்து தெரிவித்த கிளிநொச்சி புனித திரேசா தேவாலய மதகுரு யேசுதாஸ் இருபத்து ஓராம் திகதி காலை தான் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போது ஆலயத்திற்கு வருகைதந்த பெண் ஒருவரை இப்பொது பொலிசாரால் தேடப்படும் படங்களில் பார்த்ததாகவும் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net