கிளிநொச்சியில் பொலிசாரும், படையினரும் சுற்றிவளைப்பு – ஒருவர் கைது.

கிளிநொச்சி நகரில் பொலிசாரும், படையினரும் சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொண்டினர் – சந்தேகத்தில் ஒருவர் கைது.

கிளிநொச்சி நகரில் பொலிசாரும், படையினரும் சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொண்டனர்.

குறித்த சுற்றிவளைப்பு தேடுதல் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டது.

கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு அருகாமையில் உள்ள பள்ளிவாசல் இதன்போது சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொள்ளப்பட்டதுடன், அப்பகுதி முழுமையாக சோதனையிடப்பட்டது.

குறித்த சோதனை நடவடிக்கையின்போது அரபு மொழி பொறிக்கப்பட்ட போஸ்டர் வைத்திருந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாரும், படையினரும் இணைந்து சோதனை நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தம்மை அடையாளப்படுத்தும் ஆவணங்களுடன் வருகை தந்து பதிவுகளும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net