மன்னார் வான்பரப்பில் ஆளில்லா விமானம்?

மன்னார் வான்பரப்பில் ஆளில்லா விமானம்?- விசாரணைகள் தீவிரம்

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி-பேசாலை வான்பரப்பில் ஆளில்லா விமானமொன்று வானில் பறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு 10.30 மணியளவில் ஆளில்லா விமானம் சத்தமின்றி பறந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து படையினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் உள்ள இராணுவத்தினர் வானத்தை நோக்கி சுமார் 30 நிமிடங்கள் வரை துப்பாக்கிப் பிரையோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கி பிரையோக சத்தம் கேட்டதை அப்பகுதி மக்களும் உறுதிப்படுத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் ஆளில்லா விமானம் குறித்து இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இதேவேளை இன்று காலை முதல் தலைமன்னார் பகுதியில் முப்படையினரினரால் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net