“சட்டம் ஒழுங்கு அமைச்சை பொன்சேகாவிடம் ஒப்படையுங்கள்”
19 ஆம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு முரணாக ஜனாதிபதி தன் வசம் வைத்துள்ள சட்ட ஒழுங்கு அமைச்சினை நாட்டின் பாதுகாப்பு கருதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிவில் சமூக அமைப்புக்களினதும் தொழிற்சங்கஙகளின் ஒன்றியம் வலியுறுத்தியது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இந்த சூழ்நிலையில் பாதுகாப்பு நுட்பங்களை நன்கறிந்த கடந்த காலத்தில் நாட்டில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு அவரது தகுதிக்கு மிகவும் பொறுத்தமான பதவியினை வழங்கி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்பாட்டை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினர்.
ராஜகிரியவில் அமைந்துள்ள சிவில்-சமூக அமைப்புக்களினதும் தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் அலுவளகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அந்த ஒன்றியத்தினால் இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.