ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு: இருவர் கைது!
மட்டக்களப்பு- காத்தான்குடி, ரெலிகொம் வீதியிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் காரியாலயத்திலிருந்து 48 ரக T86 துப்பாக்கி ரவைகளுடன் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் அக்காரியாலயத்தில் பணிபுரிந்து வந்த அல்.அஜி.எம்.ஐ.நஸார் மற்றும் என்.எம்.எ.கரீம் ஆகிய இருவரையே பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளனர்.
இதேவேளை காத்தான்குடி கடற்கரை பகுதியில் தீடீர் சுற்றிவளைப்பு தேடுதலில் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தபோது, கடவுச்சீட்டின்றி 5 இந்தியர்கள் உட்பட 6 பேரை கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில் மட்டக்களப்பின் பலபகுதிகளில் சோதனைநடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.