இலங்கையை தொடர்ந்து இந்தியாவிலும் புர்கா அணிய தடை!

இலங்கையை தொடர்ந்து இந்தியாவிலும் புர்கா அணிய தடை!

இலங்கையில் புர்கா அணிய தடைவிதிக்கப்பட்டதை போன்று நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்தியாவிலும் பெண்கள் பொது இடங்களில் புர்கா அணிவதை தடைசெய்ய வேண்டும் என சிவசேனா வலியுறித்தியுள்ளது.

யார் ஒருவரையும் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட கூடாது என்பதுடன், அவசர காலத்தை கருத்திற் கொண்டு இந்த தடையுத்தரவை பிறப்பிக்கவேண்டும் எனவும் தனது உத்தியோகபூர்வ நாளிதழில் சிவசேனா செய்திவெளியிட்டுள்ளது.

இலங்கையில் இயேசு பிரானின் புனித நாளான ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 500இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை தேசிய புலனாய்வு பிரிவினர் கேரளாவில் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து ISIS அமைப்பினர் குறித்த இருவெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இந்தியாவின் பலப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்பட்டுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2635 Mukadu · All rights reserved · designed by Speed IT net