தாக்குதலுக்கு இலங்கையை தெரிவு செய்ய இதுவே காரணம்!
கடந்த ஒரு தசாப்தத்தில் சுதந்திரத்தை நன்றாக அனுபவித்தபோதும் தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொல்லாமையே மீண்டும் பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதென இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் பயங்கரவாத சூழல் குறித்து அவர் அளித்துள்ள செவ்வியொன்றில் இதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதில் அவர் மேலும் கூறுகையில்,
இந்த தாக்குதலுக்கு வெறுமனே இலங்கைக்குள் எந்த திட்டங்களும் இருக்க முடியாது, நிச்சயமாக இதில் வெளிநாட்டு சக்திகள் உள்ளன.
அவர்களின் வழிநடத்தாலில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நடந்துள்ள சம்பவத்தில் யார் தவறிழைத்தது என்ற காரணியை ஒருவர் மீது சுட்டிகாட்ட முடியாது.
இதில் சகல தரப்பினரும் பொறுப்புக்கூற வேண்டும். புலனாய்வுத்துறை தகவல் கிடைத்ததில் இருந்து அத பின்னர் இதனை கையாண்ட அனைவரும் பொறுப்பாளிகள் தான்.
தேசிய பாதுகாப்பு விடயத்தில் சகலரும் அலட்சியமாக இருந்துள்ளனர். அரசியல் வாதிகளும் இதில் தமது கடமைகளை தவறவிட்டுள்ளனர். ஆகவே அடுத்தகட்டமான செய்யவேண்டியவற்றை சரியாக கையாள வேண்டும் என்றார்.