வட்ஸ்அப் மோகத்தால் குழந்தையை கொன்ற தாய்!

வட்ஸ்அப் மோகத்தால் குழந்தையை கொன்ற தாய்!

கேரளாவில் தாய்ப் பாலுக்காக அழுத குழந்தையை வாயை இறுகப்பொத்தி கொலை செய்த தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையின் தாயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது.

கேரளா, பட்டினங்காடு கொல்லம் வெளி காலனியை சேர்ந்த ஷரோன் – ஆதிரா தம்பதிக்கு ஆதிஷா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 30ஆம் திகதி இரவு குழந்தை ஆதிஷா கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்து போனதாக கூறி தாய் ஆதிரா, கதறி அழுதது ஊரையும் கண்ணீர் வடிக்க வைத்தது.

ஆனால் குழந்தை உடலில் எந்தவொரு காயமும் இல்லாததாலும், குழந்தை மூச்சுத் திணறி இறந்ததாகவும் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

பொலிஸார் ஆதிராவை விசாரித்த போது,

“இரவு 12.30 மணிக்கு நான் செல்போனில் வட்ஸ்அப் மூலம் தோழியிடம் கதைத்துக்கொண்டு இருந்தேன்.

அப்போது குழந்தை பாலுக்கு அழுதது. கொஞ்ச நேரம் கழித்து பால் கொடுக்கலாம் என்று குழந்தையை தட்டி கொடுத்த போதும் அழுகையை நிறுத்தாமல் இன்னும் சத்தமாக அழுதது.

உடனே சத்தம் வெளியே கேட்காமல் இருக்க குழந்தையின் வாயை பொத்தியபடியே வட்ஸ்அப்பில் கதைத்தேன். அந்தநேரத்தில் குழந்தை இறந்தது” என கூறியுள்ளார்.

இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Copyright © 7553 Mukadu · All rights reserved · designed by Speed IT net