இலங்கையில் மீண்டும் முடங்கியது சமூக வலைத்தளங்கள்.
நீர்கொழும்பு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக வதந்திகளை பரப்பி, புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்க வாய்ப்பு உள்ளமையால் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதலையடுத்து சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டு ஜனாதிபதி பணிப்புரைக்கமைய கடந்த வாரம் வழமைக்கு திரும்பியது.
இந்நிலையில் நீர்கொழும்பு பகுதியில் திடீரென ஏற்பட்ட குழு மோதலை தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.