600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றம்!
இலங்கையில் இருந்து 600 வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் வஜிர அபேரவர்தன இந்த தகவலை தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அவர்களுள் 200 இஸ்லாமிய மத போதர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வீசா அனுமதி நிறைவடைந்த நிலையிலும் இலங்கையில் தங்கியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களுள் பெரும்பான்மையானவர்கள், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.