கொழும்பில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் கைது.
கொழும்பில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான ஒரு குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு 7 டொரின்டன் மாவத்தையிலுள்ள வீடொன்றில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யும் போது இராணுவ சீருடைக்கு இணையான ஆடைகளை வைத்திருந்ததாக நாரஹென்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கோட்பாடுகளுக்கு அமைந்த இவர்கள் செயற்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தெமட்டகொட பள்ளிவாசலுக்கு அருகில் கராத்தே பயிற்சி முகாம் ஒன்றை நடத்தி சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் தந்தை பல்வேறு நபர்களுக்கு கராத்தே கற்பித்துள்ளார்.
பல வருடங்களுக்கு முன்னர் கராத்தே பயிற்சி பெற்ற முசிம் சப்ரான் மிலான் என்பர் 2011ஆம் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் தற்கொலை குண்டுதாரியாக சென்று உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து அவரது மகன் இவர்களுடன் இணைந்து தெமட்டகொட நிலையத்தில் 2 வருடங்கள் கராத்தே பயிற்சி பெற்றுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு சகோதரர்களின் பெயர் இலங்கை பாதுகாப்பு பிரிவிடமுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் பெயர் பட்டியலில் உள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.