சுவீடன் இராஜதந்திரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றம்!

சுவீடன் இராஜதந்திரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றம்!

சுவீடன் இராஜதந்திரிகள் இருவரை ரஷ்யா, தமது நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளதாக, சுவீடன் வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

ரஷ்ய தூதுவர்களுக்கு விசா வழங்குவதற்கு சுவீடன் மறுத்திருந்தது. இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவின் இச்செயற்பாடு அமைந்துள்ளது.

இது தொடர்பாக தெரிவித்த சுவீடன் வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர், ரஷ்ய இராஜதந்திரி ஒருவரது விசா காலத்தை நீடிக்க முன்னர் மறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இராஜதந்திர விசாவிற்கான ரஷ்யாவின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுவீடன் இராஜதந்திரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இது வருந்தத்தக்கது எனத் தெரிவித்தார்.

ஆனால், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுப்பது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net