ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கு தள்ளுபடி!
கொங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ராகுல் காந்தி பிரித்தானியக் குடியுரிமை பெற்றுள்ளதன் காரணமாக அவர் தேர்தலில் போட்டியிட கூடாது என வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணை இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற போதே உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
ராகுல் காந்தி கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது பிரித்தானியாவில் உள்ள சில நிதிநிறுவனங்களில் முதலீடுகளை செய்திருப்பதாக தனது பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார்.
இதன்காரணமாக பிரித்தானியக் குடிமகன் என்ற முறையில் அவர் இந்த முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக எதிர்கட்சியினர், குற்றஞ்சுமத்தி தேர்தல் அலுவலகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து 15 நாட்களுக்குள் ராகுல் காந்தி விளக்கமளிக்கவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.