வடக்கு அல்பேர்டா கட்டுமானத் தளத்தில் விபத்து: இருவர் பலி!

வடக்கு அல்பேர்டா கட்டுமானத் தளத்தில் விபத்து: இருவர் பலி!

வடக்கு அல்பேர்டாவில் மின் உற்பத்தி நிலையமொன்றின் கட்டுமானத் தளத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தையடுத்து கட்டுமானத் தளம் மூடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை கனேடிய பொலிஸாரும், சுகாதார மற்றும் பாதுகாப்பு துறை இணைந்து முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், விபத்து நேர்ந்தபோது சம்பவ இடத்தில் இருந்தவர்களுக்கான அவசர உளவியல் ஆலோசனை நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net