‘SK16’ திரைப்படத்தில் இத்தனை கதாபாத்திரமா?
பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் – அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் ‘SK16’ திரைப்படம், ஒரு குடும்ப படமாக உருவாகுவதாக இயக்குநர் பாண்டிராஜ் கூறியுள்ளார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (புதன்கிழமை) ஆரம்பமாகியது. படம் பற்றி இயக்குநர் பாண்டிராஜ் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
“உங்கள் தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சித்தப்பா, பெரியப்பா, சின்னம்மா, பெரியம்மா, அத்தை, மாமா, மச்சான், அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பையன், மாமன் பொண்ணு, இந்த சொந்தங்களை மொத்தமாக திரையில் காண ஆரம்பம். அதேநேரம் இந்த படம் முழுக்க ஒரு குடும்ப படமாக உருவாகும்” என தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகிகளாக அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர்.
யோகி பாபு, சூரி காமெடி வேடத்திலும், ஆர்.கே.சுரேஷ், நட்டி நட்ராஜ், இயக்குநர் பாரதிராஜா, சமுத்திரக்கனி, வேலராமமூர்த்தி, நாடோடிகள் கோபால், சுப்பு பஞ்சு, அர்ச்சனா, ரமா உள்ளிட்டோரும் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கின்றார்.
ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும், வீரசமர் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்.