தோல்வி பயத்தில் இந்திய அரசியலமைப்பை இழிவுபடுத்துகிறார் மம்தா!

தோல்வி பயத்தில் இந்திய அரசியலமைப்பை இழிவுபடுத்துகிறார் மம்தா!

பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் இந்திய அரசியலமைப்பை மம்தா பானர்ஜி இழிவுபடுத்துகிறார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தில் உள்ள பன்குரா பகுதியில் (வியாழக்கிழமை) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,

“நாட்டின் தலைவரை பிரதமராக ஏற்க மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார். ஆனால் இம்ரான்கானை பாகிஸ்தான் பிரதமராக பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறார்.

அதிகாரிகளுடன் இணைந்து புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை விவாதிக்க மத்திய அரசு விரும்பியது. இருப்பினும் அதற்கு மம்தா அனுமதிக்கவில்லை.

மாநிலத்தை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 8888 Mukadu · All rights reserved · designed by Speed IT net