எனக்கு ஒருபோதும் பதவி ஆசை இல்லை!

எனக்கு ஒருபோதும் பதவி ஆசை இல்லை!

பதவி ஆசை இருந்திருந்தால் அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலாவிடம் கூறி நானே முதல்வராயிருப்பேன் என அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

அரவக்குறிஞ்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே டி.டி.வி.தினகரன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் யாரை வெற்றி பெற வைத்தீர்களோ, அவர்கள் சட்டப்பேரவை உறுப்பினராகி மக்களுக்கு நன்றி தெரிவிக்க கூட வரவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாவும் நானும் காரணமென கூறிய தி.மு.க.வினர் தற்போது விசாரணை ஆணையகம் அமைக்கப்போவதாக கூறி வருகிறார்களென டி.டி.வி.தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளையே தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 1369 Mukadu · All rights reserved · designed by Speed IT net