கிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை.

கிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை.

பிறந்து 56 நாட்களே ஆன கிளிக்குஞ்சு ஒன்றுக்கு, உலகிலேயே முதல் முறையாக மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் உள்ள விலங்குகள் நல மருத்துவர்களினால் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

அழியும் நிலையில் உள்ள உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள, நியூசிலாந்தை பூர்விகமாகக் கொண்ட காகபோ வகைக் கிளிகள் தற்போது 144 மாத்திரமே எஞ்சியுள்ளன.

இந்தநிலையில் நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள காட்பிஷ் தீவில் இருந்த குறித்த கிளிக் குஞ்சின் தலையில் வழக்கத்துக்கு மாறான வீக்கம் இருப்பதை கண்ட விலங்குகள் பாதுகாப்புத் துறையின் காகபோ கிளிகள் மீட்புக் குழுவினர் அதன் மண்டை ஓட்டில் துளை இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளுக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யும் வழிமுறைகளைப் பின்பற்றி, எஸ்பி 1-பி என்று பெயரிடப்பட்ட இந்தக் கிளிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

நியுசிலாந்து அரச விமான நிறுவனம் பயணச் செலவுக்கு கட்டணம் எதுவும் வாங்காமல் மாசே பல்கலைக்கழத்தில் உள்ள வைல்டுபேஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவியுள்ளது.

உலகில் உள்ள கிளி இனங்களிலேயே பருமனான காகபோ வகை கிளிகளால் பறக்க முடியாது. இவை இரவு நேரங்களிலேயே வெளியில் நடமாடும் இயல்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 8947 Mukadu · All rights reserved · designed by Speed IT net