முஸ்லிகளுக்கு எதிராக வன்முறை! பின்னணியில் தென்னிலங்கை அரசியல்வாதி!

முஸ்லிகளுக்கு எதிராக வன்முறை! பின்னணியில் தென்னிலங்கை அரசியல்வாதி!

வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளின் பின்னணியில் தென்னிலங்கை அரசியல்வாதி இருப்பதாக சிங்கள ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்த ஆட்சியாளர்களுடன் நெருக்கிய தொடர்பினை பேணி வரும் மது மாதவ, மினுவங்கொடயில் காணப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் இந்தத் வன்முறை தாக்குதல்களுடன் அரசியல் தலையீடுகள் இருப்பதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மது மாதவ என்பவர் பிரிதுரு ஹெல உருமய கட்சியை சேர்ந்த ஒருவராகும். இவர் முஸ்லிம் கலாச்சாரங்களுக்கு எதிராக தனது எதிர்ப்பை வெளியிட்டு வருபவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் முஸ்லிம் மக்களின் கடைகளுக்கு தீ வைத்து இனரீதியான வன்முறைகளை ஏற்படுத்திய 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். எனினும் கடும் அரசியல் அழுத்தம் காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் போத்தல்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 200 பேர் கொண்ட குழுவினர் குளியாப்பிட்டிய முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

வடமேல் மாகாணத்தில் தற்போது ஏற்பட்ட பெரும் அச்சுறுத்தல் காரணமாக பெருமளவு முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பெரும் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 1816 Mukadu · All rights reserved · designed by Speed IT net