ஹட்டனில் கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ழூவர் கைது, உபகரணங்கள் மீட்பு.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் கே.எம் தோட்டபகுதியில் மீன் வளர்ப்பு மேற்கொள்ளபட்டுவரும் கூடாரம் ஒன்றில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டுவந்த ழூன்று சந்தேக நபர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன்,சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமைய ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவின் நிலைய பொருப்பதிகாரி பிரதீப் தலைமையில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது இந்த ழூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு,கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தபட்ட கேஸ் சிலின்டர், அடுப்பு, கசிப்பு தயாரிக்க பயன்படுத்தபடும் ஸ்பிரீட் மற்றும் ஏனய உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாகபொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எனவே இந்த கசிப்பு உற்பத்தியானது மக்களுக்கு விற்பனை செய்வதற்காக தயாரிக்கபட்டு வந்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யபட்ட ழூன்று சந்தேக நபர்களும் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.