எரியும் நெருப்பிற்கு மத்தியில் அரசியல் செய்வதை நிறுத்துங்கள்!

எரியும் நெருப்பிற்கு மத்தியில் அரசியல் செய்வதை நிறுத்துங்கள்!

எரியும் நெருப்பிற்கு மத்தியில் அரசியல் செய்வதை நிறுத்தி, நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அஸ்கிரிய பீடம் அரச தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்கர் வெடருவே உபாலி தேரர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையின் தீவிரத்தன்மையை பல அமைச்சர்கள் உணரவில்லை. அவர்களின் பொறுப்பற்ற பேச்சுக்களின் மூலம் இது உறுதியாகிறது.

இப்பிரச்சினையை தற்போது தீர்த்துக் கொள்ள முடியாவிடின், எதிர்காலத்தில் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இச்சூழ்நிலையில் அரசாங்கம் புத்திசாதுர்யத்துடன், சிறந்த ஆலோசனைகளை பெற்று செயற்பட வேண்டும். இப்பிரச்சினைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அதனை தீர்க்க வழிசெய்ய வேண்டும்.

நாட்டில் இவ்வளவு காலமும் மக்களிடையே நீடித்த சகோதரத்துவம், நட்புறவு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை இல்லாதொழிப்பதே இந்த அடிப்படைவாதிகளின் நோக்கமாகக் காணப்படுகிறது” எனக் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Copyright © 8775 Mukadu · All rights reserved · designed by Speed IT net