நேரலை வசதியில் புதிய கட்டுப்பாடு!

நேரலை வசதியில் புதிய கட்டுப்பாடு – மீறினால் தடை!

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் பேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டதை அடுத்து நேரலை வசதியில் புதிய கட்டுப்பாடுகளை பேஸ்புக் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை நடத்திய நபர் அதனை நேரலையாக பேஸ்புக்கில் ஒளிபரப்பியது உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேரலை வசதியை பயன்படுத்துவதில் பேஸ்புக் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

பேஸ்புக்கின் விதிமுறைகளை மீறியதற்காக தடை செய்யப்படுபவர்கள் குறிப்பிட்ட சில நாட்கள் நேரலை வசதியை பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net