நாங்கள் தப்பி ஓடமாட்டோம்!

நாங்கள் தப்பி ஓடமாட்டோம்!

எனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம்கொடுக்க முடியுமாக இருந்தால் இதற்கு முகம்கொடுப்பதற்கு எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

எதிலிருந்தும் நாங்கள் தப்பி ஓடமாட்டோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

இதன்போது பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர்களால் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தெரிவுக்குழு அமைத்து விசாரிப்பது தொடர்பில் எழுந்த சர்ச்சையில் தனது கருத்தை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சி கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை நாங்கள் நிராகரிக்கவில்லை. அதுதொடர்பான விவாதத்துக்கு திகதி நிர்ணயிக்கும் பொறுப்பு சபாநாயகருக்கு இருக்கின்றது. அதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை.

தெரிவுக்குழு அமைப்பது பாராளுமன்றத்தினாலாகும். பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்கவே அது அமைக்கப்படுகின்றது.

நாங்கள் பெயரிடப்பட்டிருக்கும் தெரிவுக்குழுவுக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீனையோ வேறு உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் தேடிப்பார்க்க முடியும். தேவையென்றிருந்தால் எந்த ஆளுநர் தொடர்பாகவும் தேடிப்பார்க்கலாம்.

அத்துடன் தெரிவுக்குழுவில் திருத்தங்களை ஜயம்பதி விக்ரமரத்ன முன்வைத்திருக்கின்றார். அதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரைவேண்டுமானாலும் தேடிப்பார்க்க முடியும். தேவையென்றிருந்தால் எந்த ஆளுநர்கள் தொடர்பாக தேடிப்பார்க்கவும் எந்த தடையும் இல்லை.

அத்துடன் எதிர்க்கட்சியின் பிரேரணையை நாங்கள் நிராகரிக்கவில்லை. எனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம்கொடுக்க முடியுமாக இருந்தால் இதற்கு முகம்கொடுப்பதற்கு எங்களுக்கு எந்த தடையும் இல்லை.

அதனால் நாங்கள் எதில் இருந்தும் தப்பி ஓடமாட்டோம். மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்திருக்கும் பிரேரணை இன்னும் மேலதிக ஒழுங்குப்பத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை. அதுதொடர்பாகவும் கதைப்பதற்கு நாங்கள் தயார்.

அத்துடன் மக்கள் இதுதொடர்பாக எதிர்பார்த்து இருக்கின்றனர். அதனால் இதனை கட்சி அரசியலுக்குள் சிக்கிக்கொள்ளாமல் கொண்டு செல்ல நாங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

சபாநாயகருக்கு எதிராகவும் பாரியளவில் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. அதனால் இதுதொடர்பாக சபாநாயகரின் நிலைப்பாட்டை தெரிந்துகொள்ள விரும்புகின்றோம் என்றார்.

Copyright © 6429 Mukadu · All rights reserved · designed by Speed IT net