யாழில் வரட்சியினால் 49,381 பேர் பாதிப்பு

யாழில் வரட்சியினால் 49,381 பேர் பாதிப்பு

யாழ். மாவட்டத்தில் 14,809 குடும்பங்களை சேர்ந்த 49,381 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

இவ்வாறு வரட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குடிநீர் விநியோகத்தை யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் நிலையம் மேற்கொண்டு வருகின்றது.

நெடுந்தீவில் 1,031 குடும்பங்களும்

வேலணையில் 2,798 குடும்பங்களும்

புங்குடுதீவில் 2,422 குடும்பங்களும்

காரைநகரில் 2,760 குடும்பங்களும்

சண்டிலிப்பாயில் 1,041 குடும்பங்களும்

சாவகச்சேரியில் 3,361 குடும்பங்களும்

கரவெட்டியில் 336 குடும்பங்களும்

மருதங்கேணியில் 1,060 குடும்பங்களும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net