திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பேருந்து தீக்கிரை!

திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பேருந்து தீக்கிரை!

இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்தொன்று திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. எனினும் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தனியார் பேருந்து அவிசாவளை கிரிவந்தல பகுதியில் வைத்தே இவ்வாறு இன்று (சனிக்கிழமை) 6.15 மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனையடுத்து, பேருந்திலிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகளை வாகன சாரதியும் நடத்துனரும் இணைந்து பேருந்திலிருந்து வெளியேற்றியுள்ளனர். இதனால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படாது தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் பேருந்தின் இயந்திரப் பகுதியில் தீ பரவியுள்ளதாகவும் பின்னர் குறித்த தீ கட்டுப்பாட்டை மீறியமையால் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த பகுதிக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net