தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் கைது!

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் கைது!

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை இராணுவத்தினர் நேற்று கைது செய்துள்ளனர்.

மாவனெல்லை, பெலிகம்மான பிரதேசத்தில் இராணுவத்தினர் நடத்திய தேடுதலில் வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசிமின் போதனைகள் அடங்கிய இரண்டு சீடிக்கள், சஹ்ரான் அனுப்பியதாக கூறப்படும் இரண்டு கடிதங்களையும் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரிடம் நடத்திய விசாரணைகளை அடுத்து, குருணாகல், கெக்குனுகொல்ல பிரதேசத்தில் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் அமைப்பாளர் எனக்கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கேகாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net