கிளிநொச்சி மகாவித்தியாலயம் உள்ளிட்ட பிரபல பாடசாலைகளில் விசேட சோதனை.

கிளிநொச்சி மகாவித்தியாலயம் உள்ளிட்ட பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை.

கிளிநொச்சி மகாவித்தியாலயம் உள்ளிட்ட பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனைகள் இடம்பெற்றன.

பொலிசாரும் படையினரும் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இன்று காலை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இவ்வாறு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பலத்த பாதுகாப்பு கடமைகளிலும் பொலிசார் மற்றம் படையினர் ஈடுபட்டனர்.

பாடசாலை சூழல் பொலிஸ் மோப்ப நாய்கள் கொண்டு தேடுதலும் மேற்கொள்ளப்பட்டது, இதேவேளை வழமைபோன்று பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகம் அனைவரது பொதிகளும் சோதனையிடப்பட்டன.

21ம்திகதி தாக்குதலின் பின்னர் பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வந்தது. எனினும் கெடுபிடிகள் படிப்படியாக குறைவடைந்து வந்த நிலையில் இன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net