சிங்கப்பூரில் குப்பையை மின்சாரமாக மாற்றும் புதிய ஆய்வு கூடம்!

சிங்கப்பூரில் குப்பையை மின்சாரமாக மாற்றும் புதிய ஆய்வு கூடம்!

குப்பையை மின்சாரமாக மாற்றும் புதிய ஆய்வு கூடம் ஒன்று சிங்கப்பூரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக குழு ஒன்று இதனை வடிவமைத்துள்ளது. 40 மில்லியன் வெள்ளி செலவில் குறித்த ஆய்வு கூடம் உருவாக்கப்பட்டுள்ளது.

துவாஸ் சவுத்தில் அமைந்திருக்கும் குறித்த ஆலையில் 1,600 டிகிரி செல்சியஸில் குப்பைகளை எரியூட்டக்கூடிய வசதி உள்ளது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு எரிக்கப்பட்டு எரிவாயுவாக மாற்றப்படவுள்ளது.

அவற்றைக் கொண்டு மின்சார சக்தியை உற்பத்தி செய்யமுடியும் என நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, புதிய ஆய்வு கூடத்திற்கு தேசிய ஆய்வு நிறுவனம், பொருளியல் வளர்ச்சிக் கழகம், தேசியச் சுற்றுப்புற அமைப்பு ஆகியவை ஆதரவு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்மூலம் பல்வேறு தரப்பினரும் நன்மையடைவார்கள் என நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Copyright © 3994 Mukadu · All rights reserved · designed by Speed IT net