மோடியை வாழ்த்த மைத்திரி டில்லி பயணம்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று டில்லிக்கு பயணமாகின்றார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி வெற்றிவாகை சூடியது.
இரண்டாவது தடவையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள நிலையில், இன்று மதியம் இந்த பதிவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
டில்லியில் நடைபெறும் குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட மேலும் சில நாடுகளின் உயர் மட்ட தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
எனினும் பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.