அம்பாறை மாவட்டம் கடும் வரட்சி ; 39,421 பேர் பாதிப்பு
அம்பாறை மாவட்டத்தில் 11,381 குடும்பங்களைச் சேர்ந்த 39,421 பேர் இதுவரை வரட்சியால் பாதிப்புற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.
நெல் உற்பத்தியில் பிரதான பங்களிப்பை செலுத்தி வரும் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை மாவட்டத்தின்
நாவிதன்வெளி பிரதேசத்தில் 2,649 குடும்பங்களைச் சேர்ந்த 8,329 பேரும்
திருக்கோவில் பிரதேசத்தில் 306 குடும்பங்களைச் சேர்ந்த 1,110 நபர்களும்
பொத்துவில் பிரதேசத்தில் 195 குடும்பங்களைச் சேர்ந்த 3,738 பேரும்
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 1,078 குடும்பங்களைச் சேர்ந்த 3,577 பேரும்
அக்கரைப்பற்று பிரதேசத்தில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேரும்
மஹாஓயா பிரதேசத்தில் 1,574 குடும்பங்கள சேர்ந்த 5,994 பேரும்
அம்பாறை பிரதேசத்தில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 356 பேரும்
பதியத்தலாவ பிரதேசத்தில் 3 168 குடும்பங்களை சேர்ந்த 11 282 பேரும்
தமன பிரதேசத்தை சேர்ந்த 531 குடும்பங்களில் 2,124 நபர்களும்
உஹன பிரதேச செயலாளர் பிரிவில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 145 நபர்களும்
தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் 690 குடும்பங்களைச் சேர்ந்த 2,570 பேரும்
அம்பாறை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளத க தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடி நீரை பிரதேச செயலகங்களும் பிரதேச சபைகளும் இணைந்து நீர்தாங்கிகள் மூலம் பெற்றுக்கொடுப்பதாக தெரிவிக்கின்றனர்.
இருந்த போதும் மேலதிக தேவைகளுக்கான நீரை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் விவசாயம் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதோடு குடிநீரைப் பெற்றுக்கொள்வதிலும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பகலில் வெயில் கொளுத்துகிறது. வெப்பம் தகிக்கிறது. மக்கள் பலத்த அசௌகரியத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பெரும்பாலான வயல் நிலங்கள் தண்ணீரின்றி வாடிவருகிறது. வாய்க்கால்கள் நீரின்றி வெறிச்சொடிக்காணப்படுகின்றன.
குளம் குட்டைகள் வற்றியுள்ளன. கால்நடைகள் தீவனங்களுக்காக அங்குமிங்கும் அலைகின்றன.
நாவிதன்வெளிப் பிரதேசத்தில் வீரச்சோலைப் பிரதேசம் தண்ணீரின்றி தனித்து விடப்பட்டுள்ளது. அங்குள்ள வாய்க்கால்கள் தண்ணீரின்றி வரண்டுள்ளன.