பாகிஸ்தான் – இலங்கைக்கிடையிலான விமான சேவை மீள ஆரம்பம்.

பாகிஸ்தான் -இலங்கைக்கிடையிலான விமான சேவை மீள ஆரம்பம்.

மூன்று மாதங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவை இன்று (01) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று இலங்கையிலிருந்து 12.20 மணியளவில் விமானமொன்று கராச்சி நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாகவும், அவ்விமானம் 3.10 மணியளவில் கராச்சியை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், குறித்த விமானம் 4.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி மீண்டும் புறப்படவுள்ளது.

சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான ஏ-320ஏயார் பஸ் விமானமே சேவையில் ஈடுபட்டுள்ளதோடு, குறித்த விமானத்தில் 166 பயணிகளும் 8 விமானப் பணியாளர்களும் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி, பாகிஸ்தான் விமான சேவை அதிகார சபையானது, அந்நாட்டு வான்பரப்பை தற்காலிகமாக மூடியதை அடுத்து, சர்வதேச விமான சேவைகள் சில இடைநிறுத்தப்பட்டிருந்தன.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையில் காணப்பட்ட யுத்த முறுகல் நிலை காணப்பட்டமையே இதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 3717 Mukadu · All rights reserved · designed by Speed IT net