மழையோடு மண் விடியும்
மழையோ டொரு புயலே நிதம்
மண் மீதொரு பிழையே
நிலமே எழு திசை யாவிலும்
குளமே தரு மழையே
எழு வானிடை விழுவான் கதிர்
கரு மா முகில் எழவே
தரு வானிடை முழுவான் திசை
பெரு வானவில் எனவே
நிரையாய் வரு மொரு நாளிலே
அலையாய் கரும் முகிலே
உலை யாய் நிதம் மழை யாகியே
விரை வாய் வரும் தமிழே
எரிவாய் தினம் மெழுகாய்
நிதம் உலகால் ஒரு தவமே
விரை வாய் எழும் தமிழால்
வதம் புரியும் பெரும் பலமே
நிலம் மீதினில் உறவாடிடும்
சிறு வாலுடை நரியே
பலமோ டொரு போராடிடும்
பெரு வானுடை சனமே
முளையா தொரு பயிராகியே
விளையாதெனும் முடிவால்
சளையாதிரு சமராடியே
பயிராகிடும் பருவம்..
……கவிப்புயல் சரண்……
நன்றி – தமிழ் சரண்
01-06-2019