கூட்டமைப்பு வழங்கிய ஆதரவினால் தான் இன்று அரசாங்கம் ஆட்சியில் உள்ளது!
எமக்கு கிடைக்கின்ற திட்டங்களைப் பயன்படுத்தி, அதிலிருந்து எங்களுடைய பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கையேந்தும் மனிதர்களாக இருக்கமுடியாது.
கிளிநொச்சியில் 4,500 பேருக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடரிபில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“நீண்டகால எதிர்பார்ப்பின் பின்னர் இந்த உதவி திட்டம் எங்களுக்கு கிடைத்திருக்கின்றது. இதற்காக அமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஏற்கனவே 11 ஆயிரம் பேர் சமுர்த்தி பயனாளிகளாக உள்ள நிலையில் மேலும் 13,073 பேருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருகின்றது.
நாங்கள் இல்லை என்றால் இந்த திட்டத்தை நடத்தியிருக்க முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய ஆதரவினால் தான் இன்று இந்த அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. இந்த அமைச்சரும் உள்ளார்.
எமது கட்சியின் சுமந்திரன், கனகேஸ்வரன் போன்றவர்கள் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருப்பதற்காக நீதிமன்றம் சென்று வாதாடினார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடுமையாக உழைக்கின்றனர்.
இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் முட்டுக்கட்டை கொடுத்திருகின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.