ஹோட்டலில் கோழி இறைச்சி சாப்பிட்ட வைத்தியருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
குளியாப்பிட்டியில் கோழி இறைச்சி சாப்பிட்ட வைத்தியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வாங்கிய கோழி இறைச்சியுடன் உணவினை சாப்பிட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து ஹெட்டிபொல நோக்கி பயணித்த வைத்தியர் காலை உணவுக்காக கோழி இறைச்சி அடங்கிய உணவினை வாங்கியுள்ளார். இதன்போது கோழியின் ஒரு பகுதி இளம் பச்சை நிறத்தில் காணப்பட்டுள்ளது.
அதனை சாப்பிட்ட வைத்தியருக்கு வயிற்று வலி, தலைவலி ஏற்பட்டுள்ளது. அத்துடன் கை நடுக்கமும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வைத்தியர், குளியாப்பிட்டிய அவசர பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிஸார் குறித்த ஹோட்டலில் சோதனை நடத்தி வருகின்றனர்.