வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் அத்துரலிய ரத்ன தேரர்.
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், கண்டி போதனா வைத்தியசாலையிலிருந்து இன்று (05) வெளியேறியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீன், அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை அவர்களின் பதவிகளிலிருந்து விலகுமாறு கோரி, கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக கடந்த மே 31 ஆம் திகதி முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை கடந்த 4 நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் மேற்கொண்டிருந்தார்.
குறித்த மூவரின் பதவி விலகலை அடுத்து உண்ணாவிரத்தை கடந்த 03 ஆம் திகதி கைவிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், கண்டி போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
இந்நிலையிலேயே, அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இன்று வெளியேறியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.