முல்லைத்தீவில் ஜனாதிபதியினால் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கி வைப்பு!
முல்லைத்தீவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சியின் இறுதிநாள் நிகழ்வு இன்று(சனிக்கிழமை) முல்லைத்தீவில் இடம்பெற்றது.
இதன்போதே 600 பேருக்கு காணி அனுமதி பத்திரமும், 1100 பேருக்கு காணி உறுதி பத்திரமும், 13,643 குடும்பங்களிற்கு சமுர்த்தி உரித்து அனுமதி பத்திரங்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான கயந்த கருணாதிலக, தயா கமகே, காமினி ஜயவிக்கிரம பெரேரா, வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், வடமத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், எம்.ஏ.சுமந்திரன், சிவமோகன் மற்றும் அரச, பாதுகாப்புதுறை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.